Breaking News
Home / செய்திகள் / மதுரை “விமன் ப்ரொபஷனல் கனெக்ட்” அமைப்பின் சார்பில்,பல்வேறு துறைகளில் சாதனை செய்தோருக்கு “இன்ஸ்பரிங் ரியல் ஹீரோ 2020 விருது

மதுரை “விமன் ப்ரொபஷனல் கனெக்ட்” அமைப்பின் சார்பில்,பல்வேறு துறைகளில் சாதனை செய்தோருக்கு “இன்ஸ்பரிங் ரியல் ஹீரோ 2020 விருது

மதுரை “விமன் ப்ரொபஷனல் கனெக்ட்” அமைப்பின் சார்பில்,
சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்து சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, “இன்ஸ்பரிங் ரியல் ஹீரோ 2020 விருது” வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ரியோ கிராண்ட் ஹோட்டலில் ” ரேணுகா கௌரிசங்கர் தலைமையில், கவிதாயினி மதுரை குமாரி லட்சுமி மற்றும் ஏஞ்சல் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாநகர் காவல் உதவி ஆணையாளர் லில்லிகிரேஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையாளர் மணிவண்ணன், ஹோட்டல்கள் சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார், எக்ஸ்பிரஸ் பிரியாணி மற்றும் எஸ்.ஆர்.பி குரூப்ஸ் சேர்மன் அருண்லால், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், விஜய் டிவி புகழ் ராமர், மதுரை முத்து, பசுமலை அண்ணா காலேஜ் சேர்மன் அண்ணாதுரை, விஷால் டி மால் அதிபர் ராஜரத்தினம் இளங்கோவன், கோச்சடை சாந்தி சதன் குடியிருப்போர் சங்கச் செயலாளர் பாலகுரு, தமிழறிஞர் ஹரி கல்வி இன்ஸ்டியூட் அமைப்பு செந்தில், ஆசிரியர் காட்வின் உள்பட 50க்கும் மேற்பட்டோருக்கு அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் கார்த்திக் மற்றும் கவிதா கார்த்திக் அவர்களால் சர்வதேச ஆண்கள் தின விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *