Breaking News
Home / செய்திகள் / பழனியில் வேல் யாத்திரையை தடைசெய்ய கோரி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

பழனியில் வேல் யாத்திரையை தடைசெய்ய கோரி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

பழனியில் ஆதித்தமிழர் கட்சியின் தலைமையில் தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், உள்ளிட்ட தோழமை அமைப்புகள் ஒன்றாக இணைந்து பழனி நகரில் வருகின்ற 23 ஆம் தேதி பாஜக சார்பில் வேல் யாத்திரை என்ற பெயரில் மதச்சாயம் பூச நினைக்கும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும். ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் வேல் யாத்திரை அமையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் சிவாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆதித்தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாண்டி தலைமையில் இரணியன்,மருதமூர்த்தி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகார் மனுக்களை அளித்தனர்..

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *