மதுரையில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பின் நிரம்பிய பரவை கண்மாயை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு செய்தார்
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அனைத்து குளங்கள், கண்மாய்கள் ஏரிகள் நிரம்பி வருகிறது. மதுரை மாவட்டம் பரவையில் உள்ள 175.70 மில்லி கன அடி கொள்ளளவு கொண்ட கண்மாய் நீண்ட நாட்களாக தண்ணீர் வரத்தின்றி காணப்பட்டது.
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி பராமரிக்கப்பட்டதன் விளைவாக தற்போது பெய்துவரும் தொடர் மழையால் பரவை கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் ராஜா, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாரன், உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.