செங்கம் அருகே ஏழை மாணவி மருத்துவர் கலந்தாய்வில் தேர்ச்சி
பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கு ஊர்மக்கள் சார்பாக பாராட்டு
அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் இட ஒதுக்கீட்டில் முதல் முறையாய் மருத்துவ படிப்பில் எம்பிபிஎஸ் தேர்வாகியுள்ள மாணவி ம.சௌமியா சேர்ந்தமைக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவம் அவர்களையும் பயிற்றுவித்த , ஆசிரியப் பெருமக்களையும் பாராட்டி பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது..
நோட்டரி வழக்கறிஞர் ரமேஷ் அவர்கள் தலைமை ஏற்று மாவட்ட அமைப்பாளர் ஜே ஆர் சி செங்கம் கல்வி மாவட்டம் வெங்கட்ராமன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
அரட்டவாடி பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர தன்னை அர்ப்பணித்த பெரியவர் அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்துறையாற்றினார்.
அரட்டவாடி தலைவர் விஜயகுமார், பொரசப்பட்டு தலைவர் சுந்தர்ராஜ்.முன்னாள் அரட்டவடி தலைவர் அரசு ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் காரண கர்த்தாவான திரு சதாசிவம் அவர்களின் கல்வி பணியினையும் மாணவி மருத்துவ படிப்பில் சேர உறுதுணையான பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி,பாராட்டு கேடயம் திருவாளர் ரமேஷ் நோட்டரி வழக்கறிஞர் மற்றும் செங்கம் ஜேஆர்சி கல்வி மாவட்ட அமைப்பாளர் வெங்கட்ராமன் இவர்களின் சார்பில் பள்ளி பணியை பாராட்டி பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
மருத்துவப் படிப்பில் தேர்வான மாணவி சௌமியா தனது பெற்றோருடன் நன்றி கூறும் விதமாகவும் தன் நினைவாகவும் பள்ளி நூலகத்திற்கு சுமார் 1500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர் அன்பழகன் இந்த வெற்றி ஏற்பட காரணமான அனைவரையும் பாராட்டி மாணவி சௌமியா பள்ளிக்கும் சமூகத்திற்கும் நற்பெயர் பெற்றுத்தர வாழ்த்திப் பேசினார்.
ஆசிரியர்கள் சார்பில் மோகன், மணிவண்ணன், முருகன், அண்ணாதுரை , ஜெயக்குமார், வைரமுத்து போன்றோரும் ஆசிரியைகள் மாலதி, அனிதா , மங்கை லட்சுமி, ரஞ்சனி ,கார்த்திகா, மஞ்சுளா அலுவலக ஊழியர் சீமா, ஹரிதாஸ், கோவிந்தராஜ் மற்றும் அருண் கொரியாவில் Phd செய்பவர், எழுத்தர் திருமால் பங்கேற்று வாழ்த்தினர்.
ஏழை மாணவி நிலையை தெளிவாய் தக்க சமயத்தில் தலைமையாசிரியர் மூலம் உதவி கோரியபோது உதவிய கலாம் ஊடகவியலாளர் பிரகாசம் அவர்களுக்கு தனிப்பட்ட நன்றி கூறி சால்வை அணிவித்து கொளரவிக்கப்பட்டார்.
ஆசிரியர் சசிகுமார் அவர்கள் நன்றி உரையாற்றி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.