Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு முருகன் கோவில் முன்பாக 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் ஜெயராஜ், தலைமையில் செயலாளர் பெருமாள், பொருளாளர் உதயகுமார், முன்னிலையில் வைகை அணையில் நீர்வரத்து 60 அடி கொள்ளளவு தண்ணீர் நிரம்பினால் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும், நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் என்றும், கால்வாய் உடையும் இடத்தில் சிமெண்டு கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முருகன் கோவில் முன்பாக நடைபெற்று அங்கிருந்து ஊர்வலமாக தேவர் சிலை வந்தடைந்து பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார். பாலமேடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *