Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.

நாட்டில் கடைக்கோடியில் உள்ள சாமனிய மக்கள் எதிர்கொள்ளும் சட்டங்கள் மற்றும் நீதித்துறை குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டும் ,
தேசிய சட்ட பணிகள் ஆணையம், மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் பங்கு முக்கியமானது என்பதை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
குழித்துறையில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கடைக்கோடியில் உள்ள சாமனிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் சட்டரீதியான நீதி கிடைக்க வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நாம் அறிந்ததுதான். அதே நேரத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சட்டவிதிகளின்படி உரிய நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது நாட்டில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சட்டரீதியாக சிறப்பான தீர்வுகள் உள்ளன. சட்டங்கள் தொடர்பாக முழுமையான விழிப்புணர்வு இல்லாததே சுரண்டல், வறுமை, மோசடி, உரிமைகள் மறுக்கப்படுதல் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சட்டங்கள் மூலமும், நீதிமன்றங்களை நாடியும் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய அடிப்படை சட்ட உரிமைகளை அனைத்து மக்களும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குழித்துறையில் இருந்து ச தக்கலை, பத்மனாபபுரம் சுங்கான்கடை வழியாக நாகர்கோவிலில் முடிவடைந்தது.

பேரணியில் வழக்கறிஞர்கள் சுந்தர்சிங், வெற்றிவேல், ராஜசேகர், ஆன்ட்ரூ ஜெரோம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவில் உயர்மின் கோபுர விளக்கு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை மருத்துவர் செல்லக்குமார் எம்.பி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவில் உயர்மின் கோபுர விளக்கு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை மருத்துவர் செல்லக்குமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *