திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வட்டம், குன்னுவராங்கோட்டையில் வேளாண்மை சட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்துல்கனி ராஜா அவர்கள் தலைமையிலும், வட்டார தலைவர் காமாட்சி முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட தலைவருமான தண்டபாணி, முன்னாள் மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி திருமதி ஜான்சிராணி, மாநில முன்னாள் சிறுபான்மை துறை தலைவர் சித்திக், மாநில சிறுபான்மை ஒருங்கிணைப்பாளர் திருமதி ஸ்டெல்லா, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மற்றும் மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் பேரணி சென்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.