Breaking News
Home / செய்திகள் / செங்கத்தில் அமமுக ஆலோசனை கூட்டம்

செங்கத்தில் அமமுக ஆலோசனை கூட்டம்

செங்கத்தில் அமமுக ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பங்கேற்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து அமமுக கட்சி உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்குதல் மற்றும் ஆலோசனை கூட்டம் செங்கத்தில் கட்சி அலுவலகம் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் செங்கம் பரந்தாமன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும் வரும் 2021 தேர்தல்களில் கட்சி நிர்வாகிகள் களப்பணி ஆற்றுவது குறித்தும் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தலைமை தாங்கி செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர்.சரவணன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட இலக்கிய அணி தலைவர் டிசி சம்பத், கட்சி வளர்ச்சி குறித்தும் அதற்கான ஆயத்த பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று விவரித்து பேசினார். மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் தீபா தனபால், மா.அ.பே.தண்டம்பட்டு தங்கம், மாவட்ட எம்ஜிஆர் அணி சேட்டு மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணை அமைப்பாளர்.சுபாஷ் பாண்டியன், நகரச் செயலாளர் சங்கி( எ) சிவசங்ர் ஒ.அ.மே. சிவக்குமார் ஒன்றிய துணை பொருப்பாளர்கள் ஒ.அ.தலைவர் துக்காராமன் அணி நவீன், தனஞ்செழியன், மாஸ்டர் வெங்கடேசன்.சுகுமார்கவியரசன்.தேவி ரஜினிகாந்த், மா.பி.சேகர் அறிவு தீபா, பக்கிரி பாளையம் ஊராட்சி செயலாளர்.அருள். உள்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர். இறுதியாக த.தொ. சுபாஷ் பாண்டியன் நன்றி உரையாற்றினார்.

About Kanagaraj

Check Also

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவில் உயர்மின் கோபுர விளக்கு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை மருத்துவர் செல்லக்குமார் எம்.பி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவில் உயர்மின் கோபுர விளக்கு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை மருத்துவர் செல்லக்குமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *