மயிலாடுதுறையில் அறுந்து தொங்கிய மின்சார கம்பி.உடனடியாக செயல்பட்டு விபத்தை தவிர்த்த காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் கனரக லாரி உரசி மின்சாரக் கம்பி அறுந்து தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாகச் சென்ற பெரம்பூர் காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி கண்டுபிடித்து மின்சாரத் துறைக்கு தகவல் அளித்தார்.
மேலும் சுமார் ஒரு மணி நேரம் ஏற்பட்ட சாலை போக்குவரத்தையும் சரி செய்தார். விரைந்து வந்த மின்சார துறையினர் பின்னர் மின் இணைப்பினை சரி செய்தனர்.
தக்க சமயத்தில் மின்சாரத் துறைக்கு தகவல் அளித்ததால் மழை நேரத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் போக்குவரத்தையும் சரிசெய்த பெரம்பூர் காவல் ஆய்வாளர் விசித்ரா மேரிக்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலாம் நியூஸ் டிவி செய்தியாளர் திருமுருகன்.