Breaking News
Home / செய்திகள் / திருச்சியில் ஃபெட்காட் பேரியக்கத்தின் 25 – வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல்

திருச்சியில் ஃபெட்காட் பேரியக்கத்தின் 25 – வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல்

திருச்சியில் ஃபெட்காட் பேரியக்கத்தின்
25 – வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெற்றது.

மேற்படி தேர்தல் பொதுக்குழுவின் முதல் நிகழ்வாக தேசிய நுகர்வோர் உரிமை தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஃபெட்காட் பேரியக்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர்
கோவிந்தராஜன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

அதன்பின்னர் ஃபெட்காட் பெருந்தலைவர்
K. முருகன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்
R. பாலசுப்பிரமணியன் அவர்கள் தேசிய நுகர்வோர் உரிமை தின வரலாறு குறித்தும் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசினார்.

இந்திய அரசின் அங்கமான சில்க் மார்க் அமைப்பின் இயக்குநர் P.M.பாண்டி
உதவி இயக்குநர்
T. சிவக்குமார் ஆகியோர் தங்களது துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் சில்க் மார்க் அவசியம் பற்றியும் அனைவரிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் விரிவான உரையை ஆற்றினார்கள்.

ஃபெட்காட் துணைத் தலைவர் Dr.நா. பிரதீப்குமார் நன்றி கூற தேசிய நுகர்வோர் உரிமை தின விழா நிகழ்ச்சி தேனீர் விருந்துடன் இனிதே நிறைவுற்றது.

ஃபெட்காட் தேர்தல் பொதுக்குழு பெருந்தலைவர்
K. முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர்
R. பாலசுப்பிரமணியன் அவர்கள் 2019 – 2020 ஆம் நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை பொதுக்குழுவில் அறிவித்தார்

பொருளாளர்
S. ரெங்கராஜன் 2019 – 2020 ம் நிதியாண்டின் ஃபெட்காட் வரவு செலவுகள் மற்றும் நிதிநிலை குறித்த அறிக்கையை பொதுக்குழுவில் தாக்கல் செய்தார்.

பெருந்தலைவர்
K. முருகன் அவர்கள் அனுமதியுடன் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு பயனுள்ள பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அனைவருக்கும் ஃபெட்காட் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவில் அனைவரும் கலந்து கொண்டு உணவருந்திய பின் மதியம் 2 .30 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் தொடர்ந்தது. அடுத்த கட்ட நிகழ்வாக பொதுக்குழுவின் ஏகோபித்த அனுமதியுடன் பெருந்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுக்கும் தேர்தல் அதிகாரியாக ரமணாநந்தம் அவர்களது தலைமையில் மூவர் குழு ஏற்படுத்தப்பட்டு ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு முறையாக தேர்தல் நடத்தப்பட்டது.

வேட்பு மனு தாக்கல் பரிசீலனை நடத்தப்பட்டு தலைவராக K.முருகன் பொதுச்செயலாளராக R.பாலசுப்பிரமணியன் பொருளாளராக S.ரெங்கராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு தேர்தல் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த அனுமதியுடன் மற்ற தலைமை நிர்வாகிகளைத் தேர்வு செய்து நியமித்துக் கொள்ள தேர்வு செய்யப்பட்ட பெருந்தலைவர் K.முருகன் அவர்களுக்கு பொதுக்குழு முழு அங்கீகாரத்தை வழங்கியது.

அதன்படி
துணைத் தலைவராக
ராஜ்மோகன்
Dr. நா. பிரதீப்குமார்
P. ராஜன்
சுப்பிரமணியன்
ஆகியோரும்

இணைச் செயாலளர்களாக

ரவிச்சந்திரன்
செந்தில்குமார்
R. சிந்து சுப்பிரமணியன்
G. மோகன்
ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்பின் பல்வேறு துறைகளுக்கு இயக்குநர்களும், மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் மாவட்ட செயலாளர்களும், தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்
களும் நியமிக்கப்பட்டனர்.

ஃபெட்காட் மாநில வேளாண்மை இயக்குநராக மயிலாடுதுறை மாவட்டம் K.திருமுருகன் நியமிக்கப்பட்டார்.

மேலும் மகளிர் குழுக்களையும், மகளிர் உறுப்பினர்களையும் அதிகரிக்கச் செய்யும் விதத்தில் மாவட்டங்கள் தோறும் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் தேர்தல் பொதுக்குழுவில் கலந்து கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐந்து முகக் கவசம் அடங்கிய உறையும்,
100 மில்லி சானிடைசர் பாட்டிலும் டூர் பேக்குடன் நுகர்வோர் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களிலிருந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேர்தல் பொதுக்குழு சிறப்பாக நடந்திட முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளித்து சிறப்பித்தனர். தேர்தல் பொதுக்குழு கூட்டத்தில் திருவாரூர் ரமேஷ், சரவணன், கடலூர்
K. திருநாவுக்கரசு, திருச்சி சகுந்தலா சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மிக முக்கியமாக தமிழ்நாட்டில் கூட்டமைப்புகளாக இயங்கி வரும் அமைப்புக்களை ஒருங்கிணைத்து ஒரே ஃபெட்காட் பேரியக்கமாக இயங்க ஆலோசிக்கப்பட்டது.

மேற்படி தேர்தல் பொதுக்குழு திருச்சி மாவட்டத்தில் நடத்தி ஃபெட்காட் பெருந்தலைவர் K.முருகன் அவர்களது வழிகாட்டுதல் படி திருச்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் தேர்தல் பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரது பாராட்டுக்களையும் பெறும் வகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *