Breaking News
Home / செய்திகள் / கிருஷ்ணகிரி அருகே பர்கூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கற்பகத்துக்கு பொது மக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி அருகே பர்கூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கற்பகத்துக்கு பொது மக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி அருகே பர்கூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கற்பகத்துக்கு பொது மக்கள் பாராட்டு.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அச்சமங்கலம் கிராமத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அச்சமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்ற முருகனின் மகள் கலையரசி என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தற்போது வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு ஆங்கில விளக்க உரை மற்றும் மருத்துவ புத்தங்கங்களை மகளிர் காவல் ஆய்வாளர் கற்பகம் வழங்கினார், மேலும் ஆய்வாளர் கற்பகம் பேசியதாவது: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தாயின் கருவிலிருந்து முதியோர் வரை அவர்களை காக்க இந்திய சட்டத்தில் பாதுகாப்பு இருக்கிறது இதைத் தொடர்ந்து காவலன் என்கிற செயலை பதிவிறக்கம் செய்து ஆபத்து வரும் பொழுது எங்களை தொடர்பு கொண்டால், நாங்கள் எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவி செய்ய காத்திருக்கிறோம் என்று கூறினார்.
மாணவி பேசும்போது. மருத்துவ இடம் கிடைக்க காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 7.5 கீழ் தமிழக முதல்வர் அறிவித்த இந்த திட்டத்தின் மூலம் எனக்கு இந்த மருத்துவ சீட்டு கிடைத்துள்ளது என்று கூறினார்.
மேலும் பேசிய கலையரசி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்,கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனது பெற்றோருக்கும், எனக்கு பயிற்சி அளித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், என்னை நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி வகுப்புக்கு அனுப்பிய தனது பெரியப்பாவுக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க கூறினார். ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இன்ஸ்பெக்டர் கற்பகத்தை பாராட்டி சால்வை அணிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பட்டம்மாள் குழந்தையப்பன்,
உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல்,இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் பூபதி, ஆனந்தன்,மற்றும் தலைமை காவலர்கள் மஞ்சுளா,சுமதி,காவலர் கோவிந்தராசு ஆகியோர் உடன் இருந்தனர்.

About Kanagaraj

Check Also

மதுரை பங்கஜம் காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளியோர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

மதுரை பங்கஜம் காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி முன்னாள் மேயர் முத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *