
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவில் உயர்மின் கோபுர விளக்கு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை மருத்துவர் செல்லக்குமார் எம்.பி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி மூன்று முனை சந்திப்பு காமராஜர் சிலை அருகில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 3.40 ஆயிரம் மதிப்பிலான உயர்மின் கோபுர விளக்கு மற்றும் கல்லாவி மஜித் தெருவிற்கு ரூ 4 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பைப் லைன் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றை ஊத்தங்கரை தெற்கு வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநில செயலாளர் JS. ஆறுமுகம், மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலையில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர், அகில இந்திய செயலாளர் மருத்துவர். செல்லக்குமார் எம்.பி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் ராசாமணி ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், விஜயகுமார், திருஞான மணி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் கே.சி.பெருமாள்