
மதுரையில் சசிகலாவை வரவேற்று அதிமுக பிரமுகர் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, இவர் கடந்த ஜன 27ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் இருந்து சிறை தண்டனை முடித்து விடுதலையானார். இந்நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை முடிந்து விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தும், போஸ்டர் அடித்தும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டியவர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலுருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை 8வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர் பூமிநாதன் என்பவர், “தமிழகத்தின் சிம்மசொப்பனமே!, “தமிழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், “தமிழகத்தின் கம்பீரமே!, வருக, வருக எனவும், மேலும் அதில் “முதல்வர் எடப்பாடி பழனிசாமி” மற்றும் “துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்” ஆகியோரின் படத்தையும் போட்டு மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரச்சாரம் நடந்த நிலையில் நின்று போன மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் மதுரை மாநகர் 8வது வார்டின் மாமன்ற உறுப்பினர் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் முதன் முதலாக அதிமுகவை சேர்ந்த ஒருவரே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தும், வரவேற்றும் போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை முழுவதும் “பரபரப்பை” ஏற்படுத்தியுள்ளது.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்