
திருப்பூரில் கள்ளக்காதலியின் மகளான பிளஸ் -2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் கைது
செய்தனர் .
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
திருப்பூர் – காங்கேயம் ரோடு மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ் ( வயது 37 ) . பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கும் , கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வரும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது . இந்த பழக்கம் அவர்களிடையே மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத் தியது . அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர் . அந்த பெண்ணிற்கு 17 வயதில் , பிளஸ் -2 படிக்கும் மகள் உள்ளார் . இதற்கிடையில் அந்த பெண் வேலைக்கு சென்ற பின்னர் , ராஜ் அவ்வப்போது அந்த வீட்டுக்கு சென்று அந்த மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது .
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று , பரிசோதனை செய்தனர் . அப்போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது .
இது குறித்து மாணவியிடம் விசாரித்தபோது , அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்லும் ராஜ் குறித்து தெரிவித்துள் ளார் .
இதையடுத்து ராஜ் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது . புகாரின் அடிப்படையில் போலீசார் , ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
கலாம் நியூஸ் செய்திகளுக்காக
திருப்பூர் மயில் மணி