Breaking News
Home / செய்திகள் / மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஐ.டி விங்க் சார்பில் ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஐ.டி விங்க் சார்பில் ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தரம் தாழ்ந்து பேசி வரும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்ககோரி மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக
காவல் ஆணையாளர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. மாணிக்கம் மற்றும் புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.கே ஜெயபாலன்,
மாவட்ட தலைவர் அம்மாபிரியன் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் அப்துல்காதர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் விக்டர் ஜெபசிங்,சரவணக்குமார், ரகுராமன், வடக்கு 1ம் பகுதி செயலாளர் தங்கலிங்கம், மத்திய 2ம் பகுதி செயலாளர் செல்வகுமார், மேற்கு 1ம் பகுதி செயலாளர் கனகராஜ் மற்றும் மதன்குமார், விக்னேஸ்வரன்,இளவரசன், பாண்டித்துரை உள்பட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *