Breaking News
Home / செய்திகள் / மதுரையில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசம்

மதுரையில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசம்

மதுரையில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசம்

மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில்,(காந்திமியூசியம் ரோடு, உலக தமிழ்ச் சங்கம் அருகில்) நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் ஆணைக்கினங்க, கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் உத்தரவின்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டது.

இது குறித்து கால்நடை பன்முக மருத்துவமனை பிரதம மருத்துவர் டாக்டர் வைரவசாமி கூறுகையில்:- கடந்த வெள்ளிக்கிழமை முதல் செல்லப் பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் என்னும் வெறிநோய் தடுப்பூசிப் பணியை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராஜதிலகன் துவக்கி வைத்தார்.

4 மாதம் முடிவடைந்து ஆரோக்கியமான நிலையில் உள்ள செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு இலவசமாக ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனிதர்களுக்கும் வெறிநோய் பரவுவதை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *