
கன்னியாகுமரி மாவட்டம் ஹெலன் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் பணி துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் ஹெலன்நகர் மீனவ கிராமத்தில் Adv. S. ராஜேஷ்குமார் M.L.A. முயற்சியில் ரூபாய் 1 கோடியே 5 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கபட்டது.
துவக்க நிகழ்ச்சிக்கு கோட்ட செயற்பொறியார் வசந்தி தலமை வகித்தார்.
Rev. Fr. ஜெனீஷ் ஜெபம் செய்து அர்ச்சித்தார்.
குளச்சல் A.S.P. விஸ்வேஷ் சாஸ்திரி IPS சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் கடலரிப்பு கோட்ட உதவி செயற் பொறியாளர்கள் தாணுமூர்த்தி, சாலமோன், Adv.S.ராஜேஷ்குமார் MLA சார்பில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் Dr.J.ஜோர்தான், மீனவர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் J.கிறிஸ்டோபர், காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் V.பன்னீர் செல்வம், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் எட்வின்துரை, குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் துணை தலைவர்கள் A.வில்பிரட். ஷீபா றோஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டி ரமணிபாய், கவுன்சிலர் விஜிலா, அ.இ.அ.தி.மு.க சார்பில் இனையம் புத்தன்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் யூஜின் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.