
மதுரை மேற்கு தொகுதிகுட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை, பரவை பேரூராட்சி செயலாளர் பரவை ராஜா, 88-வது வட்ட பொறுப்பாளர்கள் எஸ்.எம்.டி. ரவி, சின்ன எம்ஜிஆர் ராஜா மற்றும் எம்ஜிஆர் மன்ற பகுதி செயலாளர் அழகர்சாமி, வழக்கறிஞர் குணசேகரன், 89வது வட்ட பொறுப்பாளர் மரக்கடை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.