
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலையத்தில் கொரோன தடுப்பு முன்னெச்சிரிக்கைக்காக பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.
போச்சம்பள்ளி பிப் : 19.02_21
கிருஷ்ணகிரி மாவட்டம் பார்கூர் உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட பாரூர் காவல் நிலையத்தில் இன்று பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ சார்பில் வட்டார மருத்துவர் தாமரை செல்வி தலைமையிலன குழு பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கபிலன் அவர்கள் முன்னிலையில் இன்று பணியில் இருந்த காவல்துறை பணியாளர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து கொரோன தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் திரு. கபிலன் அவர்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிவரும் அனைத்து காவல் நிலைய காவலர்களும் கொரோன தடுப்பூசி பொதுமக்களுக்கு முன் உதாரனமாக இருக்கவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் கொரொன தடுப்பூசி போட வேண்டும் என வழியுருத்தினார் இந்த நிகழ்ச்சியில்.பாரூர் மருத்துவ அளுவலர் Dr .முருகன், , உதவி காவல் ஆய்வாளர் ராஜா, பகுதி சுகாதர செவிலியர் கனகமணி, Hi நரசிம ராவ், ராம்குமார், மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர். மாவட்ட செய்தியாளர் கே.சி. பெருமாள்