Breaking News
Home / செய்திகள் / மதுரை தீக்கதிரில் அழகரடி முக்குகடை “K.சுப்பு ஹோட்டலின்” 5 வது கிளை திறப்புவிழா

மதுரை தீக்கதிரில் அழகரடி முக்குகடை “K.சுப்பு ஹோட்டலின்” 5 வது கிளை திறப்புவிழா

மதுரை தீக்கதிரில் அழகரடி முக்குகடை “K.சுப்பு ஹோட்டலின்” 5 வது கிளை திறப்புவிழா

மதுரையில் 55 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மக்கள் பேராதரவு பெற்ற அழகரடி முக்குகடை “K.சுப்பு ஹோட்டலின்” 5 வது கிளை திறப்புவிழா தீக்கதிர் அருகே நடைபெற்றது.தெய்வீக வார்த்தை சபை சார்லஸ் விக்டர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை ஹோட்டல் உரிமையாளர் நவநீதன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் நவநீதன் கூறுகையில்:- மதுரையில் 55 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் புகழ்பெற்ற அழகரடி முக்கு கடை கே.சுப்பு ஹோட்டலின் 5வது கிளை தீக்கதிர் அருகே திறந்துள்ளோம். திறப்பு விழா சலுகையாக முதல் இரண்டு வாரங்களுக்கு 2500 ரூபாய்க்கு மேல் சாப்பிடும் மற்றும் பார்சல் வாங்குபவர்களுக்கு ரூ 600 மதிப்புள்ள ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் இலவசமாக வழங்குகிறோம். மேலும் சாப்பிட வரும் அனைவருக்கும் முக கவசமும் இலவசமாக வழங்குகிறோம். தொடர்ந்து ஆதரவு தரும் மதுரை மக்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என கூறினார்

இவ்விழாவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் வேல்சாமி, ராஜ் மற்றும் குணா உள்பட பலர் பங்கேற்றனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை கப்பலூர் எக்ஸ்பிரஸ் மோட்டார்ஸ் ஷோரூமில் புதிய ஃபோர்ஸ் கூர்க்கா கார் அறிமுக விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சிட்கோவில் உள்ள எக்ஸ்பிரஸ் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிட் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்ன், பிரத்யேக ஷோரூம் திறப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *