
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும்,கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் ராஜு அவர்கள் வழிகாட்டுதலின்படி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

இதில் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அம்மா பிரியன் ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் அப்துல் காதர் ,விக்டர், மதன், விக்கி, பாண்டிதுரை, செல்வா, ஆனந்த், முத்து, ராம்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.