Breaking News
Home / செய்திகள் / முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் திருப்பூரில் பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் திருப்பூரில் பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் மத்தியில் அமைந்துள்ள பாஜக ஆட்சி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை பாஜக ஆளாத மாநிலங்களில் ஜனநாயக விரோதமாக செயல்படுகிறது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி இன்று புதுச்சேரி அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது போராடுபவர்களை நக்சல் எனக்கூறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது தமிழக அரசாங்கம் பினாமி அரசாங்கமாக செயல்படுவதாகவும் தேர்தல் வரும் சூழ்நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது இடைக்கால பட்ஜெட்டை பயன்படுத்தி புதிய திட்டங்களை அறிவிக்க கூடாது ஆனால் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார் இந்த அறிக்கையின் மூலம் தமிழக மக்கள் மீது பெரும் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது கடன் தள்ளுபடி கூட்டுறவு அமைப்புகள் நிலை குலைந்து போகும் 2016 ஓபிஎஸ் முதல்வராக இருந்தார் அப்போது பெரும் வறட்சி காரணமாக நீட்டிக்கப்பட்ட கடனை தற்போது தள்ளுபடி அறிவிப்பில் தள்ளுபடி செய்யவில்லை திருப்பூரில் நூல் விலை காரணமாக பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது உள்நாட்டு தேவை பூர்த்தியாகமால் ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதால் நூல் விலை இந்த நிலையில் உள்ளது மத்திய மாநில அரசுகள் நூலை கொள்முதல் செய்து நியாயமான விலையில் கொடுக்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டமாக போராடி வருகிறார்கள் இதில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள் அவ்வாறு அறிவித்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே உடனே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியவர் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளில் அனைத்திந்திய அண்ணா திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தற்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் படிப்படியாக பூரண மது விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்த நிலையில் தற்போது நடைபெறும் அம்மா ஆட்சி அம்மா அரசு என்று கூறும் அதிமுகவினர் தற்போது வரை இந்த வாக்குறுதிகளை செயல்படுத்த வில்லை ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *