Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தாராபுரம் வட்டார கை அறுவை செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தாராபுரம் வட்டார கை அறுவை செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தாராபுரம் வட்டார கை அறுவை செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா நாட்டு செங்கல் சூளை உரிமையாளர்கள் நலசங்க தலைவர் அய்யாச்சாமி, திருப்பூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்க மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வீடு கட்டுவதற்கு முக்கிய மூலப்பொருளாக செங்கல் இருந்து வருகிறது. இந்த செங்கல் உற்பத்தி தொழிலை ஏராளமானவர்கள் செய்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பாதிப்பின் காரணமாக செங்கல் உற்பத்தி தொழிலை சரியாக செய்யமுடியவில்லை. கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். தற்போதுகட்டுமான தொழில் வளர்ச்சி பெறும் நிலையில், செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் இருந்து செங்கல் உற்பத்திக்கு தேவையான செம்மண்ணை உரிய விதிமுறைக்கு உட்பட்டு எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இதனால் மண் பற்றாக்குறை நீங்கி, செங்கல் உற்பத்தி அதிகரிக்கும். செங்கல் விலையும் குறையும். என்று தெரிவித்தார்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *