Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிஜேபி சார்பாக கொடியேற்று விழா . நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிஜேபி சார்பாக கொடியேற்று விழா . நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட சேடபட்டி  அருகே மெய்யிதம்பட்டி கிராமத்தில்  பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி துணைத்தலைவர் முத்துராமன் ஜி தலைமையில், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்தரன் முன்னிலையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி பிஜேபி மாநில மற்றும் மத்திய தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி தொகுதி பங்கீட்டில் பிஜேபிக்கு உசிலம்பட்டி
கிடைக்கும் பட்சத்தில் நிறைவேற்றப்படாத மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்ககூடிய நலத்திட்ட பணி கள் உள்ளிட்ட வெற்றி வாய்ப்பை உருவாக்கும் செயல் திட்டங்கள் போன்றவை
குறித்தும் கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் உசிலம்பட்டியில் வெற்றி பெற தேவையான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில்
சேடபட்டி தெற்கு ஒன்றிய தலைவர் கர்ணன் வடக்கு ஒன்றியம் மருத காலை மாவட்டத்தலைவர் மொக்கராசு தர்மராஜ் வெங்கடேசன் கலைச்செல்வம் பன்னீர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *