
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் களத்து மேட்டுக் தெருவில் உள்ள வள்ளலார் திருச்சபையின் முப்பெரும் விழா நடைபெற்றது
வேட்டவலம் வள்ளலார் திருச்சபையின் 22ஆம் ஆண்டு தொடக்க விழா,286-ஆம் மாத பூசவிழா,வள்ளலார் திருச்சபை நிறுவனர் சுப்பிரமணிய பாரதியாரின் படத்திறப்பு ஆகிய முப்பெரும் விழாவிற்கு
அருணகிரிநாதர் மணிமண்டப குழுத்தலைவர் டாக்டர்.மாதவ சின்ராசு தலைமை தாங்கினார்.
புலவர் தங்க.விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார்.
சன்மார்க்க செம்மல் சுப்பிரமணியஅடிகளார்,
அருள்வாக்கு சித்தர் அய்யாவு அடிகளார்,
ஆன்மீக செம்மல் ஜெயபாலன், புலவர்.தமிழ்வேங்கை, முன்னாள் கவுன்சிலர் சத்தியாவதிகோபால், ஆகியோர் முன்னிலையில்
சிறப்பு அழைப்பாளர்களாக மேட்டுக்குப்பம் அன்னாதானம் ஆதினம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் மற்றும் வேட்டவலம் ஜமின்தார் AVKVTR.சம்பத் பந்தாரியார் ஆகியோர் வேட்டவலம் வள்ளலார் திருச்சபை நிறுவனர் சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து படத்திறப்பும்,அருளுரையும் என்ற தலைப்பில் ஓ.பி.ஆர். கல்வியியல் கல்லூரி தாளாளர் டாக்டர்.செல்வராஜனார் தலைமையுரையை அடுத்து
கவிதாஞ்சலி நிகழ்ச்சியை பாவரசு.பாரதிசுகுமாரன் தொடங்கி வைத்தார்.
மறைந்த சுப்பிரமணிய பாரதியாரின் சிறப்புகள் குறித்து சாகசம் கவிஞர்.முகில்வண்ணன் புகழஞ்சலி வாசித்தார்.
முன்னதாக அகவல் பாராயணம்,ஜோதி வழிபாடு, அன்னதானம்,அருட்பா இசைக்கச்சேரி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன
விழாவில் காமாட்சி சுப்பிரமணிய பாரதியார், மனோன்மணி முருகன், பிரேம்குமார்,கீர்த்தனா, அபிராமி மற்றும் ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் பச்சையம்மாள் சரவணன் நன்றி கூறினார்.