Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மதுரையில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மதுரையில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தர்ம புண்ணியன் , செயலாளர் முத்துக்கிருஷ்ணன் , பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர்கள் தேனி ஜெயக்குமார் , சதிஷ் காளையர் , கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் புகழேந்தி எழுச்சியுரை ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக செட்டியார்கள் பேரவை தேசிய தலைவர் ரவிக்குமார் , மற்றும் சதுரகிரி ஆதீனம் தவத்திரு கணேசமூர்த்தி மவுன அடிகளார் , சமூக முன்னோடி புதுக்கோட்டை கஜா , தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் டாக்டர் ஜோதிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை தெற்கு புறநகர் மாவட்ட மகளிரணி தலைவி சிவசங்கர் பாண்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் நன்றி உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
செட்டியார்கள் சமுதாய மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் . வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது . செட்டியார் இனத்தில் உட்பிரிவு பாராமல் திருமணம் செய்து கொள்வது .

சிறு குறு வியாபாரிகளின் தொழில் மேம்பாட்டிற்க்கு உதவி செய்தல் . செட்டியார்களின் பாரம்பரிய குல தொழில்களை மீட்டெடுப்பது . அரசின் சலுகைகளையும் , அரசாங்க வேலை வாய்ப்பிற்கான வழி முறைகளை செய்து தருவது .

மக்களுக்கு ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகளின் , தீர்வுகாண வழி காட்டுதலை அறிவுறுத்துவது . உலககெங்கும் வாழக் கூடிய செட்டியார்கள் இன மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பது .

செட்டியார்கள் பேரவையின் சார்பில் I.A.S. , I.P.S. , I.R.S. , I.F.S. , சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி , அரசு உயர் பதவி வகித்திட ஊக்குவித்தல் .

நமது இனத்தின் குல தெய்வம் கற்புக்கரசி மங்கல தேவி கண்ணகி அம்மனுக்கு கண்ணகி கோட்டம் லேயர்கேம்ப்பில் மணி மண்டபத்துடன் கூடிய அம்மன் சிலை அமைக்க வழிவகை செய்வது .

செட்டியார்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யவதற்காக மாவட்டம் தோறும் , ” செட்டியார் பாரம்பரிய அங்காடி ” என்ற பெயரில் விற்பனை நிலையங்கள் உருவாக்குதல் .

நமது இன தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் அக்டோபர் 2 ம் தேதி ( காந்தி ஜெயந்தி ) நாளினை நமது பேரவையின் சார்பில் தேசம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது . செட்டியார் சமுதாய மக்கள் பயன் பெறும் வகையில் படிப்பகங்கள் , பள்ளிக்கூடங்கள் , சமுதாய கூட்டங்கள் அமைக்க வழிவகை செய்வது .

நமது செட்டியார்கள் சமுதாயத்திற்குள் உட்பிரிவு பாராமல் , பாகுபாடு பாராமல் செட்டியார் என்ற ஓர் புள்ளியில் ஒன்றினைவது போன்றவை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *