
மதுரை திருஞானம் துவக்கப்பள்ளி சார்பாக வீதி தோறும் அறிவியல் கண்காட்சி
மதுரை கீழச்சந்தைப்பேட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட திருஞானம் துவக்கப்பள்ளி சார்பாக, வீதி தோறும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி “பள்ளியின் தலைவர் சுரேந்திரபாபு” தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் ராமராஜ் முன்னிலை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். அகில இந்திய மக்கள் அறிவியல் கழக பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இடைநிலை ஆசிரியை தங்கலீலா நன்றியுரை ஆற்றினார். இதில் அறிவியல் கழக மாவட்டச் செயலாளர் ராஜேஷ், செயலாளர் சிவராமன், பள்ளி பொருளாளர் உதயகுமார், துணைத் தலைவர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.