Breaking News
Home / செய்திகள் / திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே புதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே புதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே
புதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் அடுத்த
இசுக்கழிகாட்டேரி ஊராட்சியில் புதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் திருவண்ணாமலை
தெற்கு மாவட்ட செயலாளர் பி.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை நகர செயலாளர் செந்தில்குமார், திருவண்ணாமலை நகர துணை செயலாளர் ரவி, திருவண்ணாமலை நகர பொருளாளர் சக்திவேல், திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிட கூட்டணி கட்சிகளிடம் இருந்து தொகுதியை பெறவேண்டுமென்றும் அதில் மாவட்ட செயலாளர் பி.கஜேந்திரன் அவர்களை கீபென்னாத்தூர் தொகுதி வேட்பாளராக நிற்கவைத்து வெற்றி செய்யவேண்டும் என்று செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதில் திருவண்ணாமலை துணை ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் சிவமூர்த்தி கீழ்பென்னாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *