Breaking News
Home / செய்திகள் / மதுரையில் கனரா வங்கி 114 வது தின விழா

மதுரையில் கனரா வங்கி 114 வது தின விழா

கனரா வங்கியின் 114 வது தின விழாவை முன்னிட்டு மதுரை வட்ட கனரா வங்கியின் சார்பாக 8 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 16 தென் தமிழக மாவட்ட பள்ளி குழந்தைகளுக்காக மாபெரும் பொது அறிவு விநாடி வினா போட்டி மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இப்போட்டியில் 450 பள்ளிகளை சேர்ந்த 1640 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு 50.000 ரூபாயை, திருச்சி மவுண்ட் விட்ரோ பள்ளியை சேர்ந்த மாணவர் முகமது அஸ்லாம், ரகுமான் மற்றும், இரண்டாவது பரிசு 30,000 ரூபாயை மதுரை மகாத்மா குளோபல் பள்ளி மாணவர்கள் விகாஸ், கண்ணன் மூன்றாவது பரிசான 20.000 ரூபாயை திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அமோகா, சபரீஷ் ஆகியோர் தட்டிச் சென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கனரா வங்கி மதுரை வட்ட பொது மேலாளர் பரமசிவம் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர்கள் கலைச்செல்வன்,மகேந்திரன், மாதவராஜ், சினேகலதா, ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கலாம் டிவி செய்திக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Admin

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *