Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “உலகளாவிய கை கழுவும் தினம்

திருப்பூர் பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “உலகளாவிய கை கழுவும் தினம்

திருப்பூர் பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “உலகளாவிய கை கழுவும் தினம்” கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் திரு முரளி கிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பிரகாசன் தலைமை தாங்கி பேசும்பொழுது உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி உலகளாவிய கை கழுவும் தினமாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு இந்நிகழ்வின் தலைப்பு “அனைவருக்கும் சுத்தமான கைகள்”.
கை கழுவுதல் என்பது கையில் உள்ள மண் அழுக்குகளையும் நுண்ணுயிர்களையும் அகற்றுவது மட்டுமன்றி உணவை பாதுகாப்பாக உட்கொள்வது நோய்களை தடுப்பது மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவ முக்கிய பங்கு வகிக்கிறது.
வயிற்றுப்போக்கு, ஜலதோஷம் ,வாந்தி, மயக்கம் குடல்புண் ஆகியவற்றுடன் 80 சதவிகித நோய்கள் ஏற்படுவதற்கும் கைகளின் சுத்தமின்மை காரணம் .

சாப்பிடும் முன் சோப்பு போட்டு கைகளை கழுவுவதால் வயிற்றுப் போக்கையும் தடுக்கலாம் தவிர வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.

கை கழுவுதல் என்றால் தண்ணீரில் கைகளை நனைப்பது அல்ல, முறையாகவும் முழுமையாகவும் சோப்பு போட்டு கைகளை கழுவுவது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் கை கழுவும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். குழந்தைகள் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க எளிய வழி மேற்கூறியபடி சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு கழுவ மீண்டும். இதுதவிர டைபாய்டு, காய்ச்சல், மஞ்சள் காமாலை ,வயிற்றுப் பூச்சிகள், பன்றிக்காய்ச்சல் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களை நெருங்குவதில்லை. கைகளை சுத்தமாக கழுவ தால் ஆரோக்கியமாக வாழும் குழந்தைகள் பள்ளி வாழ்க்கையில் சுறுசுறுப்பாக விளங்குகின்றனர். கைகளை கழுவ உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் கால அளவு 40 முதல் 60 விநாடிகள். இந்நிகழ்ச்சியில் பல பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கை கழுவும் நிகழ்ச்சியை செயல்முறையாக செய்து காட்டினர். ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்

About Admin

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *