Breaking News
Home / செய்திகள் / வேலூர் பொய்கை நல்லூரில் மனுநீதி முகாம்

வேலூர் பொய்கை நல்லூரில் மனுநீதி முகாம்

வேலூர் மாவட்டம் நெமிலி வட்டம் பொய்கை நல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் மேலபுலம், நங்கமங்கலம் மற்றும் பொய்கைநல்லூர் கிராமங்களை ஒருங்கிணைத்து சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் இராணிபேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இம்முகாமில் மாவட்ட அளவில் அரசு துறை தலைமை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் ரூ. 2,12,50,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 463 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது உடன் ஆதிதிராவிடர் நலத்துறை வேணுசேகரன் வட்டாட்சியர் சத்திஸ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சிப்பந்திகள் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கலாம் டிவி செய்திக்காக. வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

About Admin

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *